Saturday, October 6, 2018

பத்ரிநாத் - 1 Badhrinath - 1

#ஜெய் #பத்ரிநாத் !

#பத்ரிநாத் #கோயில்....பாகம் 1...

#கடல்மட்டத்திலிருந்து சுமார் #3300மீட்டர் (10,800அடி) #உயரத்தில் உள்ள கோயில்...

பகவான் நர நாராயணனாக இரட்டையராக #மூர்த்தி #மாதாவுக்கும், #தர்மரிஷிக்கும் #வாமன #த்வாதசி என்று அவதரித்தார்கள்...

#பதரி என்றால் #இலந்தை என்று அர்த்தம்...
லக்ஷ்மி இலந்தைமரமாய் நின்று, தவம் செய்யும் நாராயணனுக்கு குளிரிலும், மழையிலும், பனியிலும் இருந்து காத்ததால் #பதரிகாஸ்ரமம் என்று பெயர்.

இங்கேதான் பகவான் நாராயணன் ஆசார்யனாக இருந்து #ஓம் #நமோ #நாராயணாய என்ற திருவெட்டெழுத்து (அஷ்டாக்ஷர) மந்திரத்தை நரனுக்கு உபதேசித்தார்....

ப்ரம்மன் வழிபட்ட சுயம்பு சாளக்ராம மூர்த்தியே பத்ரிநாத்.
கலியுகத்தில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்...

ஆதிசங்கரர் புணருத்தாரணம் செய்து, அவர் நியமித்தபடி பூஜாமுறைகளே இன்றும் பத்ரிநாத் கொயிலில் நடைபெறுகிறது...கோயிலில் பூஜை செய்பவர் கேரளத்து நம்பூதரியே...அவரை #ராவல் என்று அழைக்கிறார்கள்...

கோயிலின் உள்ளே....
வலம் வரும் போது...
லக்ஷ்மி தேவி சன்னிதி....
காமதேனு சந்நிதி...
பத்ரிநாத் ஸ்வரூபம் மற்றும் சிம்மாசந சன்னிதி...
ஹனுமான் சன்னிதி...
நர நாராயணர் சன்னிதி....
கண்டாகர்ணன் சன்னிதி....
போன்றவையும் உள்ளன.

கர்பக்ருஹ்த்தில்
இடமிருந்து வலமாக
1. குபேரன் மூர்த்தி
2.கருடாழ்வார் மூர்த்தி
3. நடுவில் பதரிநாராயண மூர்த்தி
4. உத்தவர் (உற்சவர்)
5. நாரதர்
6. நரநாராயண மூர்த்தி ஆகியோர் காட்சி தருகின்றனர்.

கர்பக்ருஹத்தின் உள்ள அகண்டஜோதி அணையாவிளக்கு எப்போதும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

அக்ஷயதிருதியையிலிருந்து தீபாவளி வரையே கோயில் திறந்திருக்கும். அதன்பிறகு கடும் பனிபொழிவு இருப்பதால், கோயில் நடை அடைக்கப்பட்டு,
உற்சவமூர்த்தியான உத்தவர் #யோகபத்திரி என்றழைக்கப்படும் பாண்டுகேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கே ஆறு மாதம் பூஜைகளை ஏற்றுக்கொள்வார்....

பத்ரிநாத் சிம்மாசனம் என்றழைக்கப்படும் Gadhdhi ஜோஷிமடத்தில்(ஜ்யோதிர்மடம்) நரசிம்மர் சந்நிதியில் வைக்கப்படும்.

உத்தவர் மிக மிக அழகான மூர்த்தி.. க்ருஷ்ணனின் தோழனான பக்தனான உத்தவரே இங்கு உற்சவராக இருக்கிறார்...நாங்கள் சென்ற சமயத்தில் வாமன த்வாதசியாதலால், உத்தவர் மூர்த்திமாதாவின் கோயிலுக்குச் செல்ல வெளியில் வந்ததால் நன்றாக அருமையாக சேவித்தோம்....

ஆதிசங்கர பகவத் பாதர், ஸ்வாமி ராமானுஜர், ஸ்ரீ மத்வசார்யார் போன்ற பலமஹாத்மாக்கள் அனுபவித்த மூர்த்தியை, கோயிலை, க்ஷேத்திரத்தை, மலையை தரிசிக்க பத்ரிநாத் உங்களையும் சீக்கிரம் அழைக்க அடியேன் பத்ரிநாத் திருவடிகளில் ப்ரார்த்திக்கிறேன்....

தொடரும்....

©குருஜீ கோபால்வல்லிதாசர்...